மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போயிடுச்சா.. இன்று முதல் சிறப்பு முகாம்
சென்னை: சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெரு மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துக் கொண்டது.

இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் குறைந்தது 4 அடி முதல் 15 அடி வரை நீர் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்த சான்றிதழ்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு மூல பத்திரம், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டா உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கிவிட்டன.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவதற்காக சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன. அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications