அடிச்சு துவைக்கப்போகும் கனமழை! சென்னை ஏரிகளின் நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. இந்நிலையில், கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் நீரை வெளியேற்றும் ஏரிகளின் நிலவரம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவங்கள், மழைப்பொழிவை கொடுக்கும். சமீபத்தில் முடிவடைந்த தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்தது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களிலும், வடமேற்கு மாவட்டங்களிலும் மழை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெய்யவில்லை. இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

chennai lake water


அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போது வரை 68% கூடுதலாக மழையை வழங்கியுள்ளது. இனி வரும் நாட்களிலும் மழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்று இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், “இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது”

அதேநேரம் சென்னையின் பிரதான ஆறுகளாக உள்ள கூவம், கொசஸ்தலை மற்றும் அடையாறு ஆகிய ஆறுகளில் நீரை வெளியேற்றும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் எவ்வளவு என்கிற விவரம் வெளியாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் - 33%
புழல் - 62%
வீராணம் - 64%
சோழவரம் - 5%
பூண்டி - 9%
கண்ணன்கோட்டை- 60%

என்கிற அளவில் நீர் இருப்பு இருக்கிறது. சராசரியாக பார்த்தால் மொத்த ஏரிகளில் 36% நீர் இருப்பு இருக்கிறது. எனவே, மழை அறிவிப்பு குறித்து கவலையடைய வேண்டியதில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+