மிக சிறப்பான நாள்.. இன்று இரவும் சம்பவம் நடக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த முக்கிய வார்னிங்
சென்னை: இன்று தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், எங்கெல்லாம் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் நிலவியது. சென்னை என்று இல்லாமல் தமிழ்நாடு முழுக்கவே கடுமையான வெயில் நிலவி வந்தது. செப்டம்பர் மாதம் என்றாலும் கூட ஏப்ரல் - மே மாதம் போல மிக கடுமையான வெயில் வாட்டி வதைத்து.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் வெயில் கடுமையாக இருந்தது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் சில இடங்களில் வெயில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை கூட சென்றது. மதுரையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெயில் நிலவியது.
திருத்தணி, வேலூர், திருச்சி, தஞ்சாவூரில் அதிக வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 41/42°C வரை வெப்பமான வெப்பநிலை பதிவானது. வங்கக்கடலில் உருவான புயல் நகர்ந்து சென்றதால் சென்னைக்கு வெயில் அதிகரித்து. நிலக்காற்று காரணமாக கடல் காற்று தடுக்கப்பட்டது. இதனால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு வெப்பநிலை அதிகரித்தது. அதேபோல் கடற்கரையிலிருந்து 5 முதல் 10 கிமீ தொலைவில் உள்ள இடங்களில் மிகவும் வெப்பமான மதிய வானிலை நிலவியது..
திடீர் மழை: இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. கடுமையாக வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையில் திடீரென மழை பெய்தது.
தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது.
5 - 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
வெதர்மேன்: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், எங்கெல்லாம் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கடலூர், பாண்டி, திருமலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை போன்ற தென் தமிழகம் தொடர்ந்து வெப்பமாகி இருக்கும்.. மாத இறுதியில் இருந்து கொங்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கிழக்கு காற்று காரணமாக மழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கடலூர், பாண்டி, திருமலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை போன்ற தென் தமிழகம் தொடர்ந்து வெப்பமாகி இருக்கும்.. மாத இறுதியில் இருந்து கொங்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கிழக்குகாற்று காரணமாக மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications