அடுத்த சில நாட்கள்.. இதுதான் ஹாட் ஸ்பாட்! இங்கெல்லாம் மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் செம தகவல்
சென்னை; தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், வறண்ட மற்றும் வெப்பமான மழை குறைவான மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் பாதிக்குப் பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு ஒரு நல்ல செய்தி வந்து உள்ளது

டெல்டா, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, கேரளா, கடலோர மற்றும் உள்துறை கர்நாடகா, உள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. வானிலையில் ஏற்பட்ட பள்ளம் எனப்படும் trough மற்றும் கிழக்கு காற்றிற்கு நன்றி, அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும். சென்னை வறண்டதாக இருக்கும், ஆனால் கிழக்குப் காற்றுக்கு நன்றி, வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். பெங்களூரில் 1 அல்லது 2 நாட்களுக்கு மழை பெய்யும்.
ஹாட்ஸ்பாட்கள் - தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4-5 நாட்களில் நல்ல மழை பெய்யும், என்று கூறியுள்ளார்.
சென்னை வானிலை தொடர்பான முன்னதாக அவர் செய்த போஸ்டில், அவர் செய்துள்ள போஸ்டில், அடுத்த ஒரு வாரத்தில் சென்னை மாநகரில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான வெப்பநிலையே இருக்கும். கிழக்கு காற்று காரணமாக ஏற்படும் வெப்பநிலை மாற்றத்திற்கு நன்றி.
கொங்கு/உள் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறையும் மற்றும் 40-41 C ஆக இருந்த இடங்களில் வெப்பநிலை 37/39 C ஆக பதிவாகும். தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை வெயில்: சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் வெப்பநிலை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக தொடங்கி உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் டீசர்தான். மார்ச் மாத இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
தமிழ்நாடு உயரும்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சராசரி வெப்பத்தை விட இன்று 2 டிகிரி குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த வருடத்தில் நேற்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாகும். நேற்று 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது./ சென்னையில் நேற்றை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கம் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் 40 C ஐ தொட கூட வாய்ப்பு உள்ளது. உண்மையான கத்ரி வெயில் இன்னும் தொடங்க வில்லை.
ஆனால் இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறையும் என்று வானிலை ஆய்வு மைய தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு காற்று வருவதற்கான காலம் நெருங்கிவிட்டது. இதனால் வரும் நாட்களில் வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் முதல் கட்டமாக வெயில் குறைவாக இருக்கும்.












Click it and Unblock the Notifications