அடுத்த ஒரு வாரம்.. தமிழகத்தில் கிளைமேட் இப்படி தான் இருக்கும்.. வானிலை மையம் சொல்வது என்ன
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், மழை மெல்லக் குறைந்தே வருகிறது. அதேநேரம் பனிமூட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுக்க பெரும்பாலும் இதே கிளைமேட் தான் நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (தென் கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் மழை கணிசமாகவே குறைந்துள்ளது. அதேநேரம் குளிர் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

பருவமழை சீசன் முடிந்துள்ள நிலையில், பனிப்பொழிவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை உட்பட பல இடங்களில் காலை நேரம் பனிமூட்டம் கூட அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஓரிரு இடங்களில் மட்டுமே மழை இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் டிசம்பர் 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (09- 12- 2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 11, 12ம் தேதிகளில் தென்தமிழகக் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் டிசம்பர் 11ம் தேதி குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செல்ல வேண்டாம்
அரபிக்கடல் பகுதிகளில் டிசம்பர் 10 வரை எச்சரிக்கை எதுவும் இல்லை. டிசம்பர் 11ம் தேதி குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications