அடுத்த 3 மணி நேரம்.. 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை தினமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. ஆகஸ்ட் 18 வரை தமிழ்நாட்டில் மிதனான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications