வேலூருக்கே ஹேப்பி.. விடாமல் கொட்டும் மழை.. இன்று இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டுமாம்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், தென்மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

வானிலை மையம்: நேற்றுகூட வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், வடதமிழக கடலோரப்பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.
குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சொன்னது. அதுபோலவே, இன்றைய தினமும் 14 மாவட்டங்களுக்கு மழை பொழிவு இருப்பதாக அறிவித்துள்ளது.
14 மாவட்டங்கள்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14 மாவட்டங்களில் குறிப்பாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையில் 2 நாட்களும், நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே, நேற்றெல்லாம் நல்ல மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பரவலாக, 1 முதல் 5 செ.மீ., வரை மழை பெய்திருக்கிறது.
கனமழை: நாளை ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் எல்லாம், இன்று நண்பகல் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற பெரும்பாலான இடங்களில், மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications