சுத்து போடும் சக்கரம்.. சென்னை சுற்று வட்டாரத்தில் சம்பவம் இருக்கு.. வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சக்கரம் நமக்கே.. வரும் 30 ஆம் தேதியும், டிசம்பர் 1 ஆம் ஆம் தேதியும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களும் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் மழை பெய்யும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதியும், டிசம்பர் 1 ஆம் ஆம் தேதியும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களும் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் மழை பெய்யும், மற்ற மாவட்டங்கலும் மழையைப் பெறும்" என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Rain weather senyar chennai

மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டு உள்ளது.

மேற்கு, வடமேற்கு திசையில் மேலும் வலுவடைந்து நகரக்கூடும். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன்பின், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், டிசம்பர், 1 ஆம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சக்கரம் நமக்கே - இன்னும் 3 நாட்கள் மட்டுமே! டெல்டா மண்டலம் 29 ஆம் தேதியும் 30 ஆம் தேதியும் நல்ல மழையைப் பெறும். கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 30 ஆம் தேதியும் நல்ல மழை பெய்யும்.

வரும் 30 ஆம் தேதியும், டிசம்பர் 1 ஆம் ஆம் தேதியும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களும் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் மழை பெய்யும், மற்ற மாவட்டங்கலும் மழையைப் பெறும்" என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், "மலாக்கா ஜலசந்தியில் இந்தோனேசியாவிற்கு அருகில் சென்யார் புயல் உருவாகி உள்ளது. அதற்கு முன்பு இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகலாம். ஆனால், அது குறுகிய கால சூறாவளியாக இருக்கும். இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியவுடன் அது மறைந்து போகத் தொடங்கும். கூடிய விரைவில் கரையை கடந்து வலுவிழக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருக்கின்றன. இரண்டு புயல் சின்னங்களும் ஒன்றை ஒன்று தாக்கி, மற்றொன்றை வலுவிழக்க செய்யும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவிற்கு அருகே உருவான சென்யார் புயல், இதன் நகர்வு பாதையை பொறுத்து தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி வரக்கூடும். அப்படி வந்தால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளுக்கு கனமழையை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+