ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா? வெதர்மேன் கொடுத்த விளக்கம்
சென்னை: வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு ஆபத்தா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "மலாக்கா ஜலசந்தியில் இந்தோனேசியாவிற்கு அருகில் சென்யார் புயல் உருவாகிறது. அதற்கு முன்பு இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகலாம். ஆனால், அது குறுகிய கால சூறாவளியாக இருக்கும். இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியவுடன் அது மறைந்து போகத் தொடங்கும்.

இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு சென்யார் புயல் என்று பெயரிடுவது குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். ஏனெனில் இந்தோனேசியாவிற்கு அருகே உருவாகும் சென்யார் தமிழ்நாடு அல்லது பிரதான இந்திய கடற்கரையை பாதிக்கப் போவதில்லை. இது மலாக்கா ஜலசந்திக்கு அருகில் வட்டமிடும்" என்று கூறியிருக்கிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதால் அதற்கான விளக்கத்தையும், அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் வெதர்மேன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, இரண்டு சின்னங்களும் ஒன்றை ஒன்று தாக்கி, மற்றொன்றை வலுவிழக்க செய்யும் அபாயம் உள்ளது.
குறிப்பாக இந்தோனேசியாவிற்கு அருகே உருவான சென்யார் புயல், இதன் நகர்வு பாதையை பொறுத்து தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி வரக்கூடும். அப்படி வந்தால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளுக்கு கனமழையை கொடுக்கும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அக்.20ம் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. அக்.1ம் தேதி தொடங்கி இன்று வரை தமிழகம் முழுவதும் சராசரியாக 348.9 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தின் இயல்பு மழை அளவு 331.1 மி.மீ அந்த வகையில், மழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்திருக்கிறது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications