தமிழ்நாடு வெதர்மேன் போட்ட லேட்டஸ்ட் பதிவு.. இந்த மேம்பை பாருங்க.. பெரிய சம்பவம் காத்திருக்கு
சென்னை: காஞ்சிபுரத்தை சுற்றிலும் கடுமையான மேகங்கள் காணப்படுகிறது என்றும், திருச்சி - பெரம்பலூர் இடையே மழை பெய்து வருகிறது என்றும் தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார். வழக்கம் போல் ஏற்காடு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து சேலம் நகருக்குள் அந்த மழை செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 12 செ.மீ. மழை பெய்திருக்கிறது.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழை பெய்திருந்தது. நேற்று அதிகாலை சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தினமும் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. கன்னியாகுமரிக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 17-ம் தேதி வரையில் 4 நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதன்படி, இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் 16-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் 17-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறநது. அதேநேரம், தமிழகத்தின் அனேக இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 19-ந் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும் பெய்யும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் என்றும் நாளை (புதன்கிழமை) வரை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியபடி இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மழை பெய்யப்போகும் இடங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் போட்டிக்கிறார்.
வெதர்மேன் போட்ட பதிவில், "காஞ்சிபுரத்தை சுற்றிலும் கடுமையான மேகங்கள் காணப்படுகின்றன. திருச்சி - பெரம்பலூர் இடையே மழை பெய்து வருகிறது. வழக்கம் போல் ஏற்காடு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து, சேலம் நகருக்குள் செல்ல வேண்டும். மதுரையில் மீண்டும் ஒரு மழை பெய்ய போகிறது.. அந்த மழைக்காக இன்று மாலை மதுரை தயாராகி வருகிறது" என்று கூறினார். வெதர்மேன் போட்ட பதிவில் உள்ள புகைப்படத்தை பார்க்கும் போது, தமிழகத்தின் காஸ்ட்லியான சாலையான நத்தம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருகிறது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications