ஊட்டி, வால்பாறையில் எந்த இடங்கள் பாதுகாப்பானவை? எங்கு செல்ல கூடாது? வெதர்மேன் சொல்லும் unsafe லிஸ்ட்
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் எந்த பகுதிகள் பாதுகாப்பானவை, எவையெல்லாம் பாதுகாப்பற்றவை என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். கோடை காலத்தில் ஆழம் தெரியாத இடத்தில் சிக்கிக் கொள்வதை காட்டிலும் இது போன்ற எச்சரிக்கைகளை பார்த்து பயணத்தை திட்டமிட்டுக் கொள்வதே நல்லது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எந்த இடம் பாதுகாப்பானது, எது பாதுகாப்பற்றது என்பதை பார்க்கலாம். இந்த எச்சரிக்கை ஜூன் 4 ஆம் தேதி வரை பொருந்தும்.
அதன் பிறகு மழை குறைந்துவிடும். எனவே அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கொடைக்கானல் மற்றும் குன்னூர்- கெட்டி பள்ளத்தாக்கு பகுதியில் நிலையான மழை பெய்யும். அதிகபட்ச மோசமான மழைக்கு வாய்ப்பில்லை.
சென்னையில் பருவமழையை போன்று தூறல்களும் குறைந்த நேரத்தில் வேகமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டம்
தவிர்க்க வேண்டியது- அவலாஞ்சி, பந்தலூர், மேல் பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, தேவாலா, ஓவேலி, நெல்லியம், முக்கூர்த்தி, போர்திமுந்த்
பாதுகாப்பானது- குன்னூர், ஊட்டி, கோத்தகிரி. இங்கெல்லாம் இயல்பான மழை நிலையாக பெய்யும். எனினும் இங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க முடியாது.
கோவை மாவட்டம்
தவிர்க்க வேண்டியது- வால்பாறை, சோலையார்
பாதுகாப்பானது- பொள்ளாச்சி, அதை சுற்றியுள்ள பகுதிகள். பொள்ளாச்சியிலும் மழை பெய்கிறது என்றாலும் வால்பாறை அளவுக்கு மிக அதிகமான கனமழை பெய்யவில்லை.
தமிழகத்தில் பாதுகாப்பான இடங்கள்
ஏலகிரி, ஏற்காடு, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை, கொடைக்கானல்
கேரளாவில் எந்த இடங்களை தவிர்க்கணும்?
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, வகமான், பீர்மேடு, இடுக்கி
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொன்முடி
பத்தினம்திட்டா மாவட்டத்தில் கவி மற்றும் மற்ற மலை பிரதேசங்கள்
கோட்டயம் மாவட்டம்- முண்டகாயம், பூஞ்சார், குமரகோம், கோட்டயம், வைக்கம், மற்றும் மலைக்குன்றுகள்
திருச்சூர் மாவட்டம்- இடமலையாறு, அத்திரப்பள்ளி, காசர்கோடு, கோழிக்கோடு மலை பகுதிகள், கண்ணூர் மலை பகுதிகள்
வயநாடு மாவட்டத்தில் வைத்ரி, பூகோடு, லக்கிடி ஆகிய இடங்களுக்கு செல்லவே கூடாது
கர்நாடகா மாநிலத்தில் எந்த இடங்களை தவிர்க்க வேண்டும்?
கூர்க் மாவட்ட மலை பகுதிகள், உடுப்பி மலை பகுதிகள், ஷிமோகா மாவட்ட மலை குன்றுகள், சிக்மக்ளூர், ஹாசன், உத்தர கன்னடா மலை, மங்களூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கனமழை காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா பகுதிகள் முழுவதுமே மூடப்பட்டது. அது போல் பைன் மரக்காடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பைன் காட்டை சுற்றி பார்த்த போது ஒரு மரம் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21 செ.மீ மழையும், பந்தலூர் எமரால்டு சேரங்கோடு ஆகிய பகுதிகளில் 9 செ.மீ மழையும், தேவாலாவில் 8 செ.மீ மழையும், கூடலூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications