‛‛இப்பவே இப்படின்னா’’.. 'கத்திரி வெயில்' எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னெப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதேபோல வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆர்வலர், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "பொதுவாக எல்-நினோ ஆண்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், எல்-நினோ முடிந்து அடுத்த ஆண்டும் வெப்பம் கடுமையாக இருக்கும். கடந்த 1998ம் ஆண்டு அதிக வெப்பம் பதிவாகியிருந்தது. காரணம் 1997ம் ஆண்டுதான் எல்-நினோ முடிந்தது.

கடந்த ஆண்டை எடுத்துக்கொண்டால் எல்-நினோ பாதிப்பு இருந்தது. எனவே வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் வெயில் தீவிரமாக இருந்ததால் பள்ளிகளுக்கு கூட விடுமுறை விடப்பட்டிருந்தது. சென்னையில் 15-16 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல இந்த காலங்களில் மழையும் பொய்த்துவிடும்.
இந்த ஆண்டை எடுத்துக்கொண்டால், வெப்பச்சலன மழை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாத காலங்களில் வெப்பச்சலன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை தலை காட்டியிருந்தாலும், போதுமான அளவு பெய்யவில்லை. இப்படியாக மழை குறைவு மற்றும் எல்-நினோ பாதிப்பு முடிவின் அடுத்த ஆண்டு என்கிற காரணத்தினாலும் தமிழகத்தில் வெயில் பொளந்துக்கட்டி வருகிறது.
கத்திரி வெயில்: இப்போதே இந்த அளவுக்கு வெயில் இருக்கிறது எனில், கத்திரி வெயில் எப்படி இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்திரி வெயில் என்பது மே மாதம் 4ம் தொடங்கி அந்த மாதம் 28ல் முடிந்துவிடும். இந்த நாட்களில் வழக்கமாக வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருந்தது. அதேபோல, ஆகஸ்ட், செப்டம்பர் உள்ளிட்ட நாட்களில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருந்தது.
முன்னெப்போதும் இல்லாததை விட இந்த நாட்களில் வெயில் அதிகமாக பதிவாகியிருந்தது. எனவே கத்திரி வெயில் நாட்களில் மட்டும்தான் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், அது முடிந்துவிட்டால் வெயில் தணிந்து விடும் எனவும் நினைக்க வேண்டாம்.
தென்மேற்கு பருவமழை: கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை நமக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்திலிலேயே நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மே இறுதியில்தான் பருவமழை குறித்து துல்லியமாக கணிக்க முடியும். வழக்கம்போல மே இறுதியில் ஜூன் தொடக்கத்தில் பருவமழை தொடங்கி விட்டால் வெப்பம் தணிந்து விடும்.
கோடை மழை: கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களை பொறுத்த அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். மழைக்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
காற்றழுத்த தாழ்வு பகுதி ஏதேனும் உருவானால் மழைக்கான வாய்ப்பு இருக்கும். மற்றபடி வேலூரில் மழை மேகங்கள் உருவானால் கூட அது சென்னை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு குறைவு" என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications