பிரதீப் என்ன சொல்றாருன்னா.. இன்றும் 3 மாவட்டங்களில் கனமழை கொட்டும்! வெதர்மேன் தந்த முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முதல் விழுப்புரம் மாவட்டம் மாரக்காணம் வரை கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து உள்ளது. நேற்று மரக்காணத்தில் 133 மில்லி மீட்டர் மழையும் இன்று 194 மில்லி மீட்டர் மழையும் சேர்ந்து மொத்தம் 327 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. செய்யூர் மற்றும் மதுராந்தகத்தில் முறையே 226 மில்லி மீட்டர், 220 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

இன்றைய நிலவரம்: மழை தற்போது தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதிகளுக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
கனமழை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைகளில் வழக்கமானது போல் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். ஆனால், கவலைப்படும் அளவுக்கு இருக்காது. இதை 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துடன் ஒப்பிடக்கூடாது. இயற்கை ஒவ்வொரு முறை தரும் மழையை வைத்தும் பீதி அடைய வேண்டாம். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் பின்னர் இந்த மழை குறையலாம். வியாழக்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலையுடன் பொங்கல் கொண்டாடலாம்." என்றார்.
வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியிலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications