கோடை வெப்பத்திற்கு இன்றுடன் என்ட் கார்டு! சென்னை உள்பட வடதமிழகத்தில் மழை பெய்யும்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும் , சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோடை காலம் இன்றுடன் முடிகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
SUMMER COMES TO END TODAY. Rains chances increase for North Tamil Nadu including KTCC (Chennai) from today. An exciting weekend ahead
— Tamil Nadu Weatherman (@praddy06) May 16, 2025
=i====================
One of the most unique years for Tamil Nadu. There was no heat wave seen in Tamil Nadu this year and Chennai will not… pic.twitter.com/86nnArTXlZ
தமிழகத்திற்கு இந்த ஆண்டு தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று என்றே சொல்லலாம். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக வெப்ப அலை இல்லை. அது போல் இந்த மே மாதத்தில் சென்னையிலும் வெயிலானது ஒரு நாள் கூட 40 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டவில்லை. இதே நிலைதான் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018, 2004 ஆகிய ஆண்டுகளில் இருந்தது.
வெப்பநிலை
பொதுவாக இது போன்ற வெப்பநிலை இல்லாமை என்பது மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ இருக்கும். ஆனால் தற்போது மே மத்தியிலேயே இருப்பது இதுதான் முதல் முறை. இதனால் குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தும்.
காற்றழுத்தம்
எனவே இந்த மாத இறுதியில் அரபிக் கடல், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 10 நாட்களில் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு- மேற்கு பகுதியில் காற்று சுழற்சியானது வடதமிழகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோரங்களில் நெருங்கி வருகிறது. எனவே இனி வரும் நாட்கள் வெப்பமில்லாமல் ஜாலியான நாட்களாக அமையும்.
எங்கெல்லாம் மழை
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகை , மயிலாடுதுறை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
பெங்களூரிலும் கனமழை
பெங்களூரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் வெப்பமில்லா கோடையை ஜாலியாக கழியுங்கள். அதற்காக சென்னையில் 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவும் என எடுத்துக் கொள்ளக் கூடாது. வழக்கத்தை விட இந்த ஆண்டு மே மாதம் வெப்பநிலை குறைவாக இருக்கும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மையம்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எப்போது மழை
16 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழை
17-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications