இரண்டாக பிளந்த மேற்கு தொடர்ச்சி மலை! அப்புறம் எப்படி மழை பெய்யும்? எச்சரித்த வெதர்மேன் பிரதீப் ஜான்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை திடீரென வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் வேறெந்த மாவட்டத்திற்கும் இல்லாத அளவு மலைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றன. இன்றும் இங்கு பேசப்படும் பழந்தமிழை போலவே, மலைகளும் பழமையாக இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மலைகள் வெட்டி சுரண்டப்படுவது அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் நிறைய இருக்கின்றன. இங்கு தூண்டில் வளைவு அமைக்கவும், கடல் அரிப்பை தடுக்க பாறைகளை போடவும் மலையிலிருந்து தொடக்கத்தில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டன.

ஆனால், இது அப்படியே தனிநபர்களின் தேவைகளுக்காக நீண்டது. கேரளாவில் இதுபோன்று மலைகளை குடைந்து பாறைகளை எடுக்க அனுமதி கிடையாது. எனுவே, கேரளாவுக்கு தேவையான அனைத்து பாறைகளும், மணல்களும் கன்னியாகுமரியிலிருந்து கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. வேலைக்காக சென்னை போன்ற ஊர்களுக்கு வரும் குமரி மக்கள் ஓரிரு ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் சென்று பார்த்தால், ஊருக்கு அடையாளமாக இருந்த மலையையே காணவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், பொற்றையடி, கோழிக் கோட்டுப் பொத்தை, சுருளோடு, குரங்காடி, சித்திரங்கோடு, களியல் உள்ளிட்ட இடங்களில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகள் குறிப்பிட்ட அளவை கடந்து மலையின் வளங்களை சுரண்டுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெளியாகியிருந்த வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, குமரி மாவட்டத்தின் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பலத்த சத்தத்துடன் பாறைகள் உருண்டு விழுந்திருக்கின்றன. குவாரிகளின் அளவுக்கு மீறிய சுரண்டல்தான் இந்த மலை வெடிப்புக்கு காரணம் என்று சூழலியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மலை வெடிப்பு குறித்து எச்சரித்துள்ளார். இது குறித்து தனது x சோஷியல் மீடியாவில்,
“ஒவ்வொரு மலையும் மழைக்கு மிக முக்கியமானதாகும். நல்ல சாலைகளில் வாகனங்களை ஓட்ட வளர்ச்சி என்பது முக்கியமானதாக இருந்தாலும் மலைக்கு மாற்று இருக்க முடியாது. குவாரிகளுக்காக மலை நொறுக்கப்படுவதை பார்க்க வலி மிகுந்ததாக இருக்கிறது. குறைவான மழை பொழிவுக்கு இதுவும் காரணமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை மூலம் தமிழகம் தேவையான அளவுக்கு மழையை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மேற்கு தொடர்ச்சி மலைகள்தான். குளிர்ந்த காற்று மேலே செல்வதன் மூலம் அது மழையாக பொழிகிறது. காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதிதான் மேலே உயர எழும்புகிறது. ஆனால், மலைகள் இல்லாவிட்டால், அல்லது உயரம் குறைந்துவிட்டால் அந்த பகுதிகளில் மழையின் அளவு குறைந்துவிடும். இதைத்தான் சுருக்கமாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications