ஸ்டார்டிங்கிலேயே டிரிபிள் செஞ்சுரி மழை! சோழவரம்தான் டாப்பு! எங்கு எவ்வளவு மழை? வெதர்மேன் டேட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் பருவமழையிலேயே 300 மி.மீ. தாண்டிய மழை பதிவு என குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். அதில் எது டாப்பு என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரத்தில் 300 மி.மீ. க்கு மழை பதிவாகி முதல் 3 சென்சுரியை கொடுத்துள்ளது.

chennai rain rain

அது போல் செங்குன்றத்தில் 279 மி.மீ. மழையும் வடசென்னையில் உள்ள இடையன்சாவடியில் 260 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஆவடியில் 255 மி.மீ. மழையும் கொட்டி தீர்த்தது. எந்த தாலுக்காவில் எவ்வளவு மழை பெய்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கும்மிடிப்பூண்டியில் 95 மி.மீ. மழையும், பள்ளிப்பட்டில் 71 மி.மீ. மழையும் ஆர்கே பேட்டையில் 32 மி.மீ. மழையும், பொன்னேரியில் சோழவரத்தில் 302 , பொன்னேரியில் 158 , செங்குன்றத்தில் 279, பூந்தமல்லி தாலுக்காவில் ஜமீன் கொரட்டூரில் 77, பூந்தமல்லியில் 85, திருத்தணியில் திருவிலாங்காட்டில் 41, திருத்தணியில் 72 மி.மீ மழை பெய்துள்ளது.

திருவள்ளூர் தாலுக்காவில் பூண்டியில் 60 , தாமரைப்பாக்கத்தில் 156 மி.மீ. மழையும் திருவள்ளூரில் 90 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஊத்துக்கோட்டையில் 93 மி.மீ. மழையும் ஆவடியில் 255 மி.மீ மழையும் பெய்துள்ளது. மொத்தம் 1867 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 124 மி.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிக மழை என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளதால் சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ள கார்களை மக்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும் சென்னையில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் காற்றழுத்தம் கரையை கடக்கும் போது சென்னையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், சிபி சாலை சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் எம்ஆர்டிஎஸ் சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் சென்னையில் மழை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இதுவரை 3,17,935 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் மழை நீர் மொத்தமாக அகற்றப்பட்டுள்ளது. 103 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+