நாளை கவனமா இருங்க! சென்னை டூ புதுவை வரை! கொட்ட போகிறது மழை! வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: இந்த புயலானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக மிக அதி கனமழையை கொடுக்கும் என்றும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். இது மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அதிகரிக்கும்.

இந்த புயலானது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு முதல் புதுவை வரை உள்ள பகுதிகளில் மிக மிக அதி கனமழையை கொடுக்க போகிறது. அதிகபட்ச எச்சரிக்கையுடன் நாளை மழை நிலவரத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம்.
கனமழை நீடித்தால் இது ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். புதுவை முதல் சென்னை வரை நாளை அளவுக்கு அதிகமான மழையை கொட்ட போகிறது. எனவே கவனமாக இருங்கள். நேற்று இரவு ஒரு சிறிய மேகக் கூட்டம் 50 முதல் 60 செ.மீ. மழையை கொடுத்ததை மறக்க வேண்டாம். இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தற்போது நாகப்பட்டினத்தின் கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென் கிழக்க 360 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் புதுவை இடையே அதாவது காரைக்கால்- மகாபலிபுரம் இடையே நாளை (நவ.30) பிற்பகல் புயலாகவே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் கரையை கடக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக மாற போகிறது. இதனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் இன்று சென்னைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
-
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?











Click it and Unblock the Notifications