என்ன மாதிரியான நாள்! அடுத்தடுத்து செஞ்சுரி! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்! என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு வானிலை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், 1. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Tamil Nadu weatherman warning century percent rain in the many parts of the state

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்வடன் கூயெ லோ, தேனி வற்றுத தின மமைல் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமுதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டிற்கு மழைபொழிவை பொறுத்தவரை என்ன மாதிரியான நாள் இது. 22ம் தேதியில் மிக அதிக மழை பெய்துள்ளது. தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் 100 மிமீ மழை பெய்துள்ளது.

இன்று மற்றும் நாளை மாலையும் கூட தமிழ்நாட்டிற்கு நல்ல சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சக்கரம் வருது; முன்னதாக அவர் செய்த போஸ்டில், மழை பெய்யாத மோசமான அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மிகையான மழையை நவம்பர் மாதம் கொண்டு வர உள்ளது.

தமிழ்நாட்டில் நிறைய மழை நாட்கள் இந்த நவம்பர் மாதங்களில் வர உள்ளது. வானிலையில் இது செம்ம பவுன்ஸ் பேக் ஆகும். தென் தமிழ்நாட்டில் உள்ள அணைகளும் நிரம்பி வருகின்றன. அதேபோல் நவம்பரில் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சக்கரம் வர கூட வாய்ப்பு உள்ளது. அந்த சக்கரம் எந்த பக்கம் நோக்கி செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை மைய எச்சரிக்கை; 23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+