"நாளை காலை 9 மணி வரை.." புது அலர்ட் தரும் வெதர்மேன்.. எச்சரிக்கையா இருங்க மக்களே.. என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடுமையான பனிமூட்டம் காரணமாகக் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

பொதுவாக ஜன. மாதங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனி மூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்தாண்டும் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை. பல பகுதிகளில் இன்று காலை கூட கடுமையான பனி மூட்டம் நிலவியது.

 Tamil Nadu weatherman warns poor visibility in Chennai for next three days

இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கவே சிரமப்பட்டனர். சில மீட்டருக்கு அப்பால் செல்லும் வாகனங்கள் கூட தெளிவாகத் தெரியாத ஒரு சூழலே நிலவியது. அடுத்த சில நாட்களுக்கும் இந்த பனி மூட்டம் இருக்கும் என்றே தெரிகிறது.

போகி பண்டிகை: இன்று போகி கொண்டாடப்படும் நிலையில், இதன் காரணமாகவும் புகை கிளம்புகிறது. இதுவும் கூட பார்வை திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது. சென்னை விமான நிலைய சாலையைக் காலை புகை மூட்டம் சூழ்ந்தது. அதிகாலை முதலே பனி மூட்டமும் நிலவி வருவதால் விமானச் சேவை சிறிது பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சென்னை மற்றும் வட தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் வரை மூடுபனி நிலவுவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. நாளை மற்றும் அடுத்த இரண்டு நாட்களில் பனிமூட்டம் காரணமாகச் சாலையில் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாது.. இன்று போகி கொண்டாடப்படுவது கூடுதல் காரணமாக அமையும்.

என்ன காரணம்: காலை 9.00 மணிக்குப் பின்னரே சாலைகள் தெளிவாகத் தெரியும்.. பகல் நேரத்தில் காற்று வீசாது என்பதால் காலை சில மணி நேரங்கள் வரை மூடுபனி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை இல்லாத நிலையில், காற்று எங்கும் வீசுவதில்லை. நம் மேல் உள்ள உயர் அழுத்தப் பகுதி மேலிருந்து காற்றைத் தள்ளுகிறது.

 Tamil Nadu weatherman warns poor visibility in Chennai for next three days

எவ்வளவு நாட்கள்: அடுத்த 3 நாட்களில் இரவு வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் வாகனங்களைப் பாதுகாப்பாக டிரைவ் செய்யுங்கள்.. அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் விடுமுறை தின வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் போகி பண்டிகையில் டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை பொது இடங்களில் எரிப்பதைத் தவிர்த்து விடுமாறும் விமானச் சேவைகள் பாதிக்காமல் இருக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பைக் கொடுக்குமாறும் சென்னை ஏர்போர்ட் சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று போகி கொண்டாடப்படும் நிலையில், நாளை காலை தான் அதன் பாதிப்பு நமக்குத் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+