தமிழகம் முழுக்க விட்டு விளாச போகுது மழை.. அடுத்த மாதம் இயல்பை விட அதிகமாக பெய்யும்! டெல்டா வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 2 வாரங்களில் மழை மிக தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் (ஆகஸ்டு) தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழை பதிவாகும் என்றும், ஆகஸ்டு 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் வட கடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழகம் முழுக்க பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று அடுத்த மாதத்தில் 18 ஆம் தேதி 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று தெரித்துள்ளனர்.

ஒரு வாரமாக கொட்டிய மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த இரு மாதங்களாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் பெய்ய ஆரம்பித்த மழை கடந்த 7 நாட்களாக நீடித்தது. நேற்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
குறிப்பாக நேற்று நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, கோவையில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்றிலிருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வழக்கத்தைவிட 6 சதவீதம் குறைவு
இதனால் மழை குறைந்து மீண்டும் வெயில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் குறைவாகவே பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியாக 10 செமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது இயல்பை விட 6 சதவீதம் குறைவு என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த மாதம் மழை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலன மழையால் பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. குறிப்பாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியாக 10 செமீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 6 சதவீதம் குறைவு ஆகும். அதிகளவில் வெயில் அடித்ததன் காரணமாகவே மழையின் அளவு குறைந்துள்ளது.
அடுத்த 2 வாரங்கள் வெளுத்து எடுக்கும்
எனினும் அடுத்த மாதம் முதல் 2 வாரங்களில் மழை மிக தீவிரமாக இருக்கும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிக மழை பதிவாகும். குறிப்பாக முதல் 2 வாரங்களில் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும். ஆகஸ்டு 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் வட கடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழகம் முழுக்க பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும்.
இதேபோன்று ஆகஸ்டு 18 ஆம் தேதி 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். எனவே அடுத்த மாதத்தில் இயல்பை விட மழை அதிகமாக இருக்கும். இயல்பான வெப்பநிலையே பதிவாகும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications