தமிழகத்தில் 5ஆவது ஆண்டாக நல்ல மழை! சென்னை டாப் நாட்ச்! டேட்டாவுடன் வந்த தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் 5 ஆவது ஆண்டாக நல்ல மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இயல்பான மழையை காட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்ததாகவே அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையின் விவரங்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது. எனவே இது வடகிழக்கு பருவமழை சீசன்களிலேயே சிறப்பானதாகும்.

பொதுவாக வடகிழக்கு பருவமழையானது கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே அதிக மழை பொழிவை கொடுக்கும். ஆனால் இந்த முறை உள்மாவட்டங்களுக்கும் மழை பெய்துள்ளது. உதாரணமாக, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மாதங்களில் 500 மி.மீ. மழையை நெருங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 3 மாதங்களில் அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு நல்ல மழை பொழிவு கிடைத்துள்ளது. அதாவது இந்த சீசனில் மட்டும் 1000 மி.மீ. மழை அளவை தாண்டியுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு சீசன் சிறப்பானதாக இருந்தது.
வடகிழக்கு பருவமழை சீசன் என்பது பெரிதும் சீரற்ற முறையில் இருக்கும். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக இயல்பாக இருக்கிறது. வரும் 2025 ஆம் ஆண்டு நமக்கெல்லாம் நல்ல நாளாக அமைய வாழ்த்துகள். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது என்பதை நம்புவீர்களா? இந்த சீசனில் நல்ல மழை பொழிவை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று வடமேற்கு திசையில் வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். தொடர்ந்து வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
20-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
21-12-2024 முதல் 25-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் வேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications