அடுத்த 2 நாட்களில் பெரிய சம்பவம்.. இடி மின்னலுடன் கொட்ட போகுது மழை.. சற்று முன் வந்த பரபர அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே இருந்த வந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த முறை வடகிழக்கு பருவமழை நமக்கு நல்ல மழையைக் கொடுத்தது. குறிப்பாக டிசம்பர் மாதம் முதல் வாரம் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை வைத்துச் செய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னைக்கு அடுத்து டிச. கடைசியில் தென்தமிழக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக இருந்தது.
வானிலை மையம்: ஆனால், அதன் பிறகு மழை பெரியளவில் இல்லை.. மாறாக உறை பனி தான் அதிகமாக இருந்தது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் பல பகுதிகளில் உறை பனி அதிகமாகவே இருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பரவலாக அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் செய்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஜன.19) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை (ஜன. 20) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் ஜன. 21 முதல் ஜன.25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: இன்று ஜன.19 மற்றும் ஜன.20 ஆகிய நாட்களில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 10 செமி மழை பெய்துள்ளது. மேலும், தற்போது மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சில வாரங்கள் கழித்து தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் அடுத்த இரு நாட்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications