சத்தமின்றி.. சைலண்ட்டாக அரபிக்கடலில் கரையை கடந்த "தேஜ்" புயல்.. நடந்தது என்ன?
சென்னை: அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. ஏமன் நாட்டின் கடற்கரையில் அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் இரண்டு நாட்களுக்கு முன் மிக தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு சாதகமான சூழ்நிலை தற்போது தீவிரமாகிக்கொண்டு இருக்கிறது. தென்மேற்கு அரபிக் கடலில் தேஜ் புயல் மையம் கொண்டிருக்கிறது. அரபிக் கடல் தேஜ்புயல் இன்று இந்த புயல் கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு சற்று வலுக்குறைந்து மிக தீவிர புயலாக நிலவுகிறது. தேஜ் புயல் இன்று அதிகாலை வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஏமன் கடற்கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்னொரு பக்கம் ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 24ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பாதிக்குமா ?: ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தால் , தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கக்கடலில் உருவாகி உள்ள ஹாமூன் புயல் தமிழ்நாட்டிற்கு மழையை கொடுக்கும். அதாவது அரபிக்கடலில் இருப்பதால் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட மழை பெய்யாது. ஏனென்றால் புயல் எதிர் திசையில் செல்கிறது.
வானிலை மையம்: தமிழ்நாடு மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று 24 அக்டோபர் 2023 துவங்கியுள்ளது. இந்த மழை தீவிரம் அடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.10.2073 மற்றும் 26.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2023 சமதல் 27.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும், என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications