சொதசொதவென மிரட்டும் மழை.. 'ரெட் அலர்ட்.. பள்ளி கல்லூரிகளுக்கு தெலங்கானாவில் விடுமுறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்று 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்கள் பருவமழை காரணமாக அதிகமான மழை பொழிவை பெற்றிருக்கின்றன. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாநிலங்களில் மழை அதிகமாக பெய்து வருகிறது.

Telangana announces holiday for schools due to red alert

தெலங்கானா மாநிலத்தை பொறுத்த அளவில், கரீம்நகர், பெத்தப்பள்ளி, நல்கொண்டா, கம்மம், சூர்யாபேட்டை, மஹபூபாபாத், விகாராபாத் மற்றும் வாரங்கல் என 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறையை கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஹைதராபாத் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள வேல்பூர் மண்டலத்தில் 46 சென்டிமீட்டர் மழை பெய்ததால் இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதில் இரண்டு ஏரிகள் உடைந்துள்ளதால் வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.

Telangana announces holiday for schools due to red alert

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஹைதராபாத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மூன்று கட்டமாக வீட்டிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஐடி நிறுவனங்கள் மதியம் 3 மணிக்குள் தங்கள் ஊழியர்களை விடுவிக்குமாறும், IKEA மற்றும் பல்லுயிர் சந்திப்பு மற்றும் ராய்துர்கம் பகுதியைச் சுற்றியுள்ள நிறுவனங்கள் மாலை 4.30 மணிக்கு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் எனவும், கச்சிபௌலியில் அமைந்துள்ள நிறுவனங்கள் 6 மணிக்கு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் டிராபிக் ஓரளவு குறையலாம்.

மேலும் தற்போது வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இரண்டு பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+