இன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்! எங்கே அதிகம்! சென்னையில் எவ்வளவு? "முடியல.." கதறும் மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் கூட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. அதீத வெப்பம் மக்களைப் படாய் படுத்தி வருகிறது. இன்றும் கூட மாநிலத்தில் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சம் எங்கே வெப்பம் அதிகம்.. சென்னையில் எவ்வளவு வெப்பம் பதிவானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் என்பதால் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து கொஞ்சம் வெப்பம் குறைந்தாலும் கூட பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருக்கிறது.

9 இடங்களில் வெப்பம் சதம்
இன்றைய தினம் தமிழ்நாட்டில் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், திருவண்ணாமலை மற்றும் வேலூரில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. அதேபோல மதுரை நகரம், கரூப் பரமத்தியில் வெப்பம் 103 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.
சென்னையில் எவ்வளவு
மேலும், ஈரோடு, திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. அதேபோல சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதமே இந்தளவுக்கு வெப்பம் உச்சத்தைத் தொடும் நிலையில், அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
வெதர்மேன்
தமிழகத்தில் நிலவும் வெப்பம் தொடர்பாக வெதர்மேன் தனது ட்வீட்டில், "சென்னையின் உட்புறப் பகுதிகள் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கிறது. வேலூரில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. நாளை ஈரோடு, கரூர், மதுரை மற்றும் வேலூர் ஆகிய இடங்களிலும் வெப்பம் அதிகரிக்கும். உள்மாவட்ட வெப்பத்தையும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய கடலோரப் பகுதிகளின் வெப்பத்தையும் ஒப்பிட முடியாது. ஏனெனில் அதிக ஈரப்பதம் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தை விட நாம் உணரும் வெப்பம் அதிகம் போல இருக்கும்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெப்பம் குறித்து தனது தினசரி செய்திக்குறிப்பில், "அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்த வரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். ஏப்ரல் 22 முதல் 24 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்று முதல் ஏப்ரல் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இது மட்டுமின்றி இன்று முதல் ஏப்ரல் 22 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications