6 வது ரவுண்டு மழை ஓவர்.. தமிழ்நாட்டில் இனி தகதகன்னு வெப்பம் அதிகரிக்கும்! ஜனவரி எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 6 வது சுற்று பருவ மழை நிறைவடைந்து வெப்ப நிலை அதிகரிக்க தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு குளிர் குறைந்தும், பகல் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அதித கனமழையாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 22 செ மீ, நாலுமுக்கு 21 செ மீ, காக்காச்சி 20 செ மீ, மாஞ்சோலை 10 செ மீ மழை பதிவாகி உள்ளது. கடந்த 54 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 44 செ மீ, நாலுமுக்கு, காக்காச்சி தலா 40 செ மீ மழை பதிவாகி உள்ளது.

Temperature in Tamilnadu increases after 6th round of Rainfall

வானிலை எதிர்ப்பார்ப்பு: தமிழகத்தில் ஆறாம் சுற்று வட கிழக்கு பருவமழை நிறைவடைந்தது. இன்று (30 12 2023) முதல் (05 01 2024) வரை அடுத்த 5 - 7 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். பகலில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் (இயல்பை விட சற்று அதிகமான வெப்ப நிலை) மற்றும் இரவில் குளிர்ச்சியான சூழலும் நிலவும். தமிழகத்தில் குறிப்பிடும் அளவிற்கு மழை வாய்ப்பு இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் லேசான / மிதமான மழை பதிவாகலாம்.

ஜனவரி முதல் வாரத்தில் நீடிக்கும் பருவ மழையின் காரணமாக ஜனவரி 5, ஜனவரி 6, ஜனவரி 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த மழை பாதிப்பை ஏற்படுத்தும் மழையாக அமையாது. ஜனவரி 7 ஆம் தேதியுடன் பருவ மழை பின்வாங்க துவங்கி விடும். ஜனவரி முதல் பருவ மழை நீடிப்பதற்கோ, தாழ்வு மண்டலம் / புயல் டெல்டாவில் கரையை கடந்து உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக அரபிக் கடல் செல்வதற்கோ வாய்ப்புகள் இல்லை. குளிர் கால பயிர்கள் விதைப்பு பணிகளை தமிழகத்தில் துவங்கலாம்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+