ஜூலை! “அச்சச்சோ அவரா? மோசமான ஆளாச்சே..” வரலாற்றில் முதல்முறை இதுதான்! விஞ்ஞானிகள் ஷாக் தகவல்
சென்னை: பூமியில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே இந்த ஜூலை மாதம் பதிவான வெயில்தான் மிகவும் அதிகமானது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த 1990களுக்கு பிறகு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற பூமிக்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் படிம எரிபொருட்களின் பயன்பாடுகளும் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் இது வரைமுறையற்ற அளவில் பயன்படுத்தப்பட்டது. அப்போதுதான் விஞ்ஞானிகள் கடல் மற்றும் வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதை அடையாளம் கண்டனர்.

அதாவது கடல் உயிரினங்கள் வழக்கத்திற்கு மாறாக இடம் பெயர்ந்தது. குறிப்பிட்ட காலத்தில் வலசை வரும் பறவைகள் பாரம்பரிய இடங்களுக்கு வருவதை தவிர்த்தன. அதேபோல எதிர்பாராத அளவு மழை கொட்டி தீர்த்தது. மறுபுறம் எதிர்பாராத அளவு வறட்சி நிலவியது. இவை அனைத்திற்கும் மேலாக எப்போதும் பனி மூடியிருக்கும் அண்டார்டிகா, ஆர்ட்டிக் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து பெரிய பெரிய பனி பாறைகள் உருக தொடங்கின. இவையெல்லாவற்றிற்கும் என்ன காரணம் என்று தேடி போகும்போதுதான் புவி சூடாகிக்கொண்டே இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதற்கு காரணம் மேலே சொன்னவைதான். அதாவது தொழிற்சாலைகள் அதிகரிப்பு, படிம எரிபொருள் பயன்பாடு அதிகரிப்புதான் இதற்கு காரணம். இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியக்ஸுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதை குறைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்த 1 டிகிரி செல்சியஸுக்கா உலக நாடுகள் இவ்வளவு மெனக்கெடுகின்றன? என்று நமக்கு தோன்றலாம்.
ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானில் வந்த வரலாறு காணாத வெள்ளம், எப்போதுமே ஜில் என்று இருக்கும் பிரிட்டனில் அடித்த மோசமான வெயில், கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் பெய்த மழை என இவை எல்லாம் இந்த 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்ததால்தான் வந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியையும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது மனிதர்கள் புவியின் வெப்ப நிலையை கணிக்க தொடங்கியது முதல் தற்போது வரை பதிவான வெப்பநிலையில் 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான வெயில்தான் மிகவும் உட்சபட்சமானது என்று கூறியுள்ளனர். இதற்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படி வெயில் அடித்தது. தற்போது அதைவிட 0.33 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது.
தென் அரை கோளத்தை விட வட அரை கோளத்தில்தான் அதிக அளவு வெயில் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பகமான 'கோபர்நிகஸ்' கூறியுள்ளது. இந்தியா தொடங்கி சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆர்டிக் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதுதான் பூமியின் வட அரை கோளம். இங்குதான் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த பகுதியைதான் வெப்பம் அதிக அளவில் பாதித்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடந்த 1991ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டு வரை கணக்கெடுத்து பார்க்கையில் இதுபோன்று நான்கு முறை வெப்பநிலை அதிக அளவில் பதிவாகியுள்ளது. 2016ம் ஆண்டு ஒரு முறையும், 2019, 2020ம் ஆண்டு இரண்டாவது, மூன்றாவது முறையும் இந்த ஆண்டு நான்காவது முறையும் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. அதேபோல இந்த ஆண்டின் மீதமுள்ள மாதங்களிலும் வெப்பநிலை அதிக அளவில்தான் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளளனர். இதன் அர்த்தம், அடிக்கடி புயல்கள், சூறாவளி, பெரு மழை மற்றும் வெள்ளம், அதீத வெப்பம் ஆகியவை உருவாகும் என்பதுதான்.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications