110 கிமீ வேகத்தில் காற்று சுழன்றடிக்கும்.. அதிதீவிரமாகும் டானா புயல்.. என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாக உள்ள டானா புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த சேதத்தை டானா புயல் ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசும். கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இடையே காற்று வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

tamilnadu weatherman summer weather news

புயல் : இன்று காலை வங்க கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி. மத்திய கிழக்கு வங்கக் கடல்,வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் இந்த தாழ்வு பகுதி அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி 'டானா' புயல் கரையை கடக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

ஆனால் இது ஓடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் புரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை பாதிப்பு : சென்னையை தாக்குமா?: அதாவது சென்னைக்கு அருகே வரும் போதே ஒன்றிரண்டு நாட்கள் மழை பெய்யும். அதன்பின் மழை இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இதனால் வெயில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனென்றால் இந்த புயல்.. மழை கொண்ட மேகங்களை ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்த்தி செல்லும். இதனால் சென்னைக்கு வெயில் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இது தொடர்பான சென்னை வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவலில், இந்த புயல் காரணமாக சென்னை நேரடியாக பாதிக்காது. ஆனால் சென்னைக்கு லேசான மழை இருக்கும்.

வங்கக்கடலில் ஏற்படுவதால் மழை இருக்கும். புயல் ஒடிசா நோக்கி சென்ற பின் வெயில், வறண்ட வானிலை கூட ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டு உள்ளனர்.

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+