நீண்ட.. கனமான இரவு.. இன்று இரவு 7 மணிக்கு பின் நடக்கும் சம்பவம்.. சென்னைக்கு மிக்ஜாம் புயல் வார்னிங்!
சென்னை; சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு கனமழை தொடங்கும்.. நேரம் செல்ல செல்ல மழை மோசமாக மாறும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.
மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் உருவாகி தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் புயலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
புயல் வருது; மிக்ஜாம் புயல் காரணமாக மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி, சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது மிக்ஜாம் புயல். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும்.
தீவிர புயலாக கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ரெயின்ஸ் கணிப்பு: சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு கனமழை தொடங்கும்.. நேரம் செல்ல செல்ல மழை மோசமாக மாறும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது. அவர்கள் போஸ்டில், மிக்ஜாம் புயல் இப்போது சென்னையிலிருந்து 250 கிமீ தொலைவில், தென்கிழக்கு திசையில், பாண்டிச்சேரிக்கு கிழக்கே உள்ளது.
( மிக்ஜாம் புயல் நெருங்கியதும்.. மக்கள் போனுக்கு போன முக்கிய மெசேஜ்.. அரசே அனுப்பிய வார்னிங் .. என்ன?)
கிழக்கு வடகிழக்கு திசையில் இது தொடர்ந்து நகர்கிறது . இதன் மூலம் வடக்கு தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்கிறது. இது இன்று இரவு மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கைக்கோள் படங்கள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக வரக்கூடிய மேகங்களின் மழை இரவு 7 மணியளவில் தொடங்கலாம். படிப்படியாக இந்த மழை நீளமாகவும் மோசமாகவும் மாறும். நீண்ட மழையாக, கடினமான மழையாக இது இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

புயல் நிலவரம்: 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 33 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது என்று வானிலை ஆய்வும மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலை முன்னிட்டு 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications