மிக்ஜாம் புயல் நெருங்கியதும்.. மக்கள் போனுக்கு போன முக்கிய மெசேஜ்.. அரசே அனுப்பிய வார்னிங் .. என்ன?
சென்னை; வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக மக்களின் போன்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்று எச்சரிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் இன்று மிக்ஜாம் புயல் உருவாகி உள்ளது. கடந்த 4 மணி நேரமாக மிக்ஜாம் புயல் உருவாகி வலிமை அடைந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 33 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது என்று வானிலை ஆய்வும மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலை முன்னிட்டு 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் கண் வரும் போது முக்கியம்; தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
( என்ன இது? மேஜைக்கு வந்த தகவலை.. பார்த்ததும் கண்கள் சிவந்த ஸ்டாலின்! மிக்ஜாம் புயலுக்கு இடையே சூறாவளி)
இந்த புயல் என்னதான் 5ம் தேதி கரையை கடக்கலாம். 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் அதற்கு முன்பே.. இன்று.. அதாவது 3ம் தேதி பிற்பகல் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 3ம் தேதி பிற்பகல் மூலம் 4ம் தேதி பிற்பகல் வரை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 24 மணி நேரம்தான் சென்னைக்கு ரொம்ப முக்கியம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் புயலின் கண் சென்னைக்கும் மிக அருகே வரும். அல்லது தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு அருகே புயலின் கண் வரும் .
அப்போது புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கண் சென்னைக்கு அருகே வரும் போது கடுமையான மழை சென்னையில் பெய்யும்.

எச்சரிக்கை மெசேஜ்; வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக மக்களின் போன்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்று எச்சரிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்று அதிகனமழை பெய்யும் . இதனால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள் மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும், இதனால் வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்ற மெசேஜ் மக்கள் பலருக்கும் போன் மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications