என்ன இது? மேஜைக்கு வந்த தகவலை.. பார்த்ததும் கண்கள் சிவந்த ஸ்டாலின்! மிக்ஜாம் புயலுக்கு இடையே சூறாவளி

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னை மழைக்கு இடையே கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடுமை காட்டியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 மாதமாகாவே அடிக்கடி கடும் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னையை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பொழியும் மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. அதுவும் மாநிலத்தின் தலைநகரான சென்னை யின் முக்கிய பகுதிகள் அனைத்தும் மழை நீர் குளம் போல் தேங்கி போக்குவரத்துக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் கடும் சவாலை ஏற்படுத்தியது.

Tamil Nadu Weather: CM Stalin not happy with officials word ahead of Michaung cyclone in Chennai

சென்னை மழை: சென்னை சாலைகளை சரி செய்யவும், மழை நீர் கால்வாய்கள் மற்றும் கழிவு நீரகற்றும் கால்வாய்களை சரி செய்யும் பணிகளுக்காக மட்டும் ரூபாய் 4,000 கோடி அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.. ஆனாலும், அந்த திட்டத்தின் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

எப்போது போல மழைக்காலங்களில் மக்கள் படும் துயரங்கள் இந்தாண்டும் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தண்ணீர் தேங்கவில்லை ; மழை பொழிவது நின்றதும் அடுத்த 10 நிமிடங்களில் மழை நீர் ஓடிவிடுகிறது என்று அரசு அதிகாரிகள் சொன்னதை வைத்து, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இதே தொணியில் பதில் அளித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அந்த பேட்டியை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருதற்குள், சென்னையில் எங்கெல்லாம் மழை நீர் கடல் போல் காட்சியளிக்கிறது ? வாகனங்கள் எங்கெல்லாம் தடை பட்டு நின்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது?

( புயலுக்கு முன்னே.. சென்னையில் நிலவும் பலத்த அமைதி.. கவனிச்சீங்களா? இதுதான் பயத்தை கிளப்புதே!)

கவுன்சிலர்கள் எட்டி பார்க்கவில்லை: முதல்வரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் எந்தெந்த பகுதிகள் நீரில் மூழ்கியிருக்கின்றன? என்பதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு சிலர் கொண்டு போயிருக்கிறார்கள். சென்னை கவுன்சிலர்கள் யாருமே எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் ஸ்டாலிண்டம் சொல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது கோபம் கொண்டிருக்கிறார் முதல்வர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடமும் கடுமைக் காட்டியிருக்கிறார். அத்துடன், சென்னைக்குள் செல்லுங்கள் என்று உத்தரவிட, தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இரண்டு நாட்களாக சென்னையில் பல பகுதிகளுக்கும் சென்று மழை நீரை அகற்றும் பணிகளையும், மக்களுக்குத் தேவையான உதவிகளையும் முடுக்கி விட்டுள்ளார். மிக்ஜாம் புயலில் சென்னை பாதிக்காத அளவுக்கு அதிகாரிகளை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு.

Tamil Nadu Weather: CM Stalin not happy with officials word ahead of Michaung cyclone in Chennai

சென்னை புயல் நிலவரம்; சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் நெருங்கி வரும் நிலையில் புயலுக்கு முன் அமைதி என்பது போல சென்னையே அமைதியாக காணப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயல் என்னதான் 5ம் தேதி கரையை கடக்கலாம். 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் அதற்கு முன்பே.. இன்று.. அதாவது 3ம் தேதி பிற்பகல் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 3ம் தேதி பிற்பகல் மூலம் 4ம் தேதி பிற்பகல் வரை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 24 மணி நேரம்தான் சென்னைக்கு ரொம்ப முக்கியம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் புயலின் கண் சென்னைக்கும் மிக அருகே வரும். அல்லது தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு அருகே புயலின் கண் வரும் .

அப்போது புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கண் சென்னைக்கு அருகே வரும் போது கடுமையான மழை சென்னையில் பெய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+