அதிகாரிகளுக்கு விடாமல் போன்! நிற்காமல் சுழன்ற உதயநிதி! காரணம் ஸ்டாலினுக்கு தந்த வாக்கு! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று மழை பாதிப்புக்கான முன்னேற்பாடுகளை, பணிகளை முழுக்க முழுக்க செய்தது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான். இவர்தான் களத்தில் முன்நின்று பணிகளை மேற்கொண்டார். அவரின் இந்த பணிகளை சிலர் விமர்சனம் செய்து இருந்தனர்.

முக்கியமாக எடப்பாடி பழனிசாமி இதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் திமுக அரசு குறியாக உள்ளது.

weather tamilnadu weatherman summer weather news

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கையும் விடுத்து இருந்தார்.

இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினின் பணிகளுக்கு கடுமையான ஆதரவுகளும் வந்தன. உதயநிதி நேற்று முழுக்க முழுக்க களத்தில் இருந்தார். அதிகாரிகளுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தால்.. அந்த டாஸ்க் நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் போன் செய்தார்.

சென்னை வெள்ளம், அடுத்து மழை பெய்யும் இடம், எங்கே எல்லாம் நீரை வெளியேற்ற வேண்டும், எங்கே எல்லாம் உணவு கொடுக்க வேண்டும், நீர் நிலைகளை கண்காணிப்பது, பாதுகாப்பு கொடுப்பது, மின்சார தடை இல்லாமல் பாதுகாப்பது என்று அனைத்தையும் நேரில் இருந்து உதயநிதி ஸ்டாலின் கவனித்துக்கொண்டார்.

சென்னையில் நேற்று மழை பாதிப்புக்கான முன்னேற்பாடுகளை, பணிகளை முழுக்க முழுக்க செய்தது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான். முதல்வர் ஸ்டாலின்தான் கடந்த வருடம் பணிகளை செய்தார். ஆனால் இந்த முறை உதயநிதிதான் களத்தில் நின்றார். இவர்தான் களத்தில் முன்நின்று பணிகளை மேற்கொண்டார். அவரின் இந்த பணிகளை சிலர் பாராட்டுகளையும் சிலர் விமர்சனங்களையும் செய்து இருந்தனர். முழுக்க முழுக்க இளைஞரணி நிர்வாகிகளை வைத்தே பெரும்பாலான கிரவுண்டு பணிகளை உதயநிதி செய்துள்ளாராம்.

என்ன காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதி தந்த ஒரு வாக்குறுதிதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை. இப்போதுதான் சீராகி வருகிறது. நீங்கள் வெளியே சென்று மக்களை பாருங்கள். ஆனால் அதிகமாக செல்ல வேண்டாம்.

நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அமைச்சருடன் இணைந்து பணிகளை செய்கிறேன். நீங்கள் வெளியே செல்லலாம். ஆனால் அதிகமாக இருக்க வேண்டாம். நாங்கள் பணிகளை கவனித்துக்கொள்கிறோம். நான் இதை வாக்காக கொடுக்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம், என்று உதயநிதி ஸ்டாலின் வாக்கு கொடுத்து உள்ளாராம்.

அவர் கொடுத்த வாக்கின் அடிப்படையில்தான் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பணிகளை செய்து உள்ளார். அவர் செய்த பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+