தனித்தீவாய் மாறிய ஸ்ரீவைகுண்டம்.. மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் தேவை! தென் மாவட்டங்களில் அசாதாரண சூழல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடியின் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இங்கிருந்து மக்களை மீட்க ஹெலிகாப்டர் உதவி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருக்கிறது. எனவே குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

There is a need for helicopters for rescue work in Srivaikuntam area affected by rain and floods

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்யைில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும். மழை வெள்ளத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. கருங்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கருங்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் 14 பேர் நேற்றிரவு மழைக்காக தஞ்சமடைந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வரை வெள்ளம் குறையாததால் இந்த 14 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், திருச்நெந்தூர் - பாலக்காடு, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்றிரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரயிலில் சுமார் 700 பயணிகள் சிக்கியுள்ளனர்.

மறுபுறம், ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. செய்துங்கநல்லூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்திருப்பதால் அவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இக்கிராமங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் பக்கத்தில் உள்ள மாடி வீடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். சில குடிசை வீடுகள் வெள்ளத்தால் இடிந்து விழுந்திருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவும் குடிநீரும் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருவதால் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும், மீட்பு பணிகளும் ஹெலிகாப்டர் மூலம் நடைபெற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே இந்த பகுதி தனித்தீவு போல மாறியுள்ள நிலையில், மழை மேலும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+