அடுத்த 2 மணி நேரம்.. சென்னை முதல் குமரி வரை.. இடி மின்னலுடன் 33 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், விழுப்புரம், சேலம், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று காலையில் இருந்தே மழை தொடர்ந்து விட்டு விட்டு பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 18.7 செமீ மழை பதிவானது.

இன்று காலை 6.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான நேரத்தில் மட்டும் ஆவடியில் 18.7 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்தை 14.5 செமீ, திருவலாங்காடு 12 செமீ, பூந்தமல்லி - 12, திருவள்ளூரில் 10.2 செமீ மழை பதிவாகியுள்ளது. தற்போதும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை விடாமல் காலையில் இருந்தே விட்டு விட்டு லேசாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இப்போதும் தூரல் மழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று இரவு 7.00 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில், "நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
எனவே இன்று தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு!












Click it and Unblock the Notifications