மறுபடியும் ஆரம்பித்தது மழை.. அடுத்த 3 மணி நேரம்.. இடி மின்னலுடன் கொளுத்த போகுது.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், தென்காசி, தேனி உள்பட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக விடாமல் மழை கொட்டி வருகிறது. சில நேரங்களில் கனமழையும் சில நேரங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது.

thunderstorms-and-lightning-likely-in-10-districts-including-tiruvallur-in-the-next-3-hours

வானிலை அப்டேட்

இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள அணைகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று வடகிழக்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது வெப்பச் சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

10 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்கள், தேனி, தென்காசி, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறியிருப்பதவது:- இன்று (26-06-2025) காலை 08. 30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 26-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

2 ஆம் தேதி வரை

27-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-06-2025 முதல் 02-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாட்கள் எப்படி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (26-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (27-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறபப்ட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+