20 செமீ வரை பதிவு! நெல்லையை மிரட்டும் கனமழை.. எந்த இடங்களில் எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல் இதோ
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றைய தினம் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 20 செமீ மழை பதிவாகி உள்ள நிலையில் ஏரியா வாரியாக பெய்த மழையின் அளவு குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்கதமிழகத்தில் அநேக இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்கடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, பழைய பேட்டை உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் தாமிரபரணியில் மழை வெள்ளம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மழையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீரில் அளவு என்பது மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இன்று மாலைக்குள் தாமிரபரணியில் 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படும். இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று மதிய நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 20 செமீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக பாளையம்கோட்டையில் 90 செமீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும் அம்பாசமுத்திரத்தில் 13 செமீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 14.7 செமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 13.5 செமீட்டர் மழையும் பெய்துள்ளது. நாங்குநேரியில் 18.6 செமீ, பாபநாசத்தில் 14.3 செமீ, ராதாபுரத்தில் 19.1 செமீ, திருநெல்வேலியில் 10.5 செமீ, சேர்வலாறு அணை பகுதியில் 9.8 செமீ, களக்காட்டில் 16.2 செமீ, கொடிமுடியாறு அணையில் 15.4 செமீ, நம்பியாறு அணையில் 18.5 செமீ மழை பெய்துள்ளது.
இந்த மழை அளவு எல்லாம் மதியம் 2.30 மணியளவில் பதிவானவை. அதன்பிறகும் கூட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். இதன
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications