விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.. மயிலாடுதுறை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார். காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை கருதி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகம் நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியது.

நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு முதல் காலை வரை விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்தது. நேற்றும் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை காராணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரைக்காலிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடலூரிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் மழை பெய்ததாலும், இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications