நீலகிரி மாவட்டத்தை அடித்து துவைத்த கனமழை.. கடந்த 24 மணி நேரத்தில் இந்த ஏரியாவில் தான் மழை அதிகம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது, சின்னக்கல்லாரில் 13.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக ரத்தனகிரி - தாபோலுக்கு இடையே கரையை கடந்தது. இதுதவிர மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கோவையில் கனமழை
இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலம் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை பொய்ததின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கோவையின் மிக முக்கிய ஆறாகவும் விவசாயிகள் வாழ்வாதாரமாகவும் விளங்கும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வரண்டு காணப்பட்ட சித்திரை சாவடி தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ரெட் அலர்ட் - அதிகனமழை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவை, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று (மே 25) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் சென்டி மீட்டரில் பின்வருமாறு:
அவலாஞ்சி- 21.5
சின்னக்கல்லார் - 13.7
சின்கோனா - 9.5
எமரால்டு - 9.4
பந்தலுார் - 9.3
வென்ட்வொர்த் 9.0
தேவாலா - 8.7
அப்பர் பவானி 7.4
சிறுவாணி அடிவாரம் 7.3
சோலையாறு 7.3
கூடலுார் பஜார்- 7.1
அப்பர் கூடலுார் - 6.9
கீழ் கோத்தகிரி - 6.5
சேர்முள்ளி - 6.1
பார்வுட் - 5.9
வுட் பிரையார் - 5.9
வால்பாறை - 5.1
மேடவாக்கம் - 4.8
மடிப்பாக்கம் - 4.8
மாக்கினாம்பட்டி- 4.2
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications