அடுத்த 2 மணி நேரம்.. 6 மாவட்டங்களில் கொட்டப் போகுது மழை.. நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. அதே சமயம் வழக்கத்திற்கு மாறாக இன்று பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. நேற்று மழை வெகுவாக குறைந்து, பல்வேறு இடங்களில் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்தது. எனினும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த சூறைக்காற்று வீசியது.

6 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
குறிப்பாக் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சூறைக்காற்று வீசியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, நெல்லை தென்காசி, குமரி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இன்று மதியம் வெளியான ஒரு வாரத்திற்கான அப்பேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த ஒரு வாரம்
தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 31 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி
சென்னைய்லி இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications