9 மாவட்டங்கள் குறி.. சென்னையும் இருக்கு.. இடியோடு மதியம் 1 மணி வரை வெளுக்கப்போகும் மழை.. ‛அலர்ட்’
சென்னை: தமிழகத்தில் இன்று மதியம் 1 மணிவரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் டிசம்பர் 3ம் தேதி புதிதாக புயல் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 3ம் தேதி புயலாக மாற உள்ளது.
இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. சென்னைக்கு 800 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி வரும்போது கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புயல் பாதிக்கும் மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் புயலுக்கு முன்பாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்றும், நேற்று முன்தினமும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*******
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications