மொத்தமாக மாறும் கிளைமேட்! சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு! வெளுக்க போகுது மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்தது.

 Total of 12 districts including Chennai will get rain for next 3 hours says meteorological department

குறிப்பாக மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இப்படிக் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் ஏக குஷியில் உள்ளனர்.

வானிலை: இப்போது தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, MMDA, அரும்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. மதியம் எப்போதும் சென்னையில் வெப்பத்தில் உச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று மதியமே பல இடங்களில் மழையால் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பல இடங்களில் ஒரு வித சில் வானிலையே இருந்தது.

12 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பெரம்பலூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதிய நேரத்தில் பொதுவாக வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், இப்போது வானிலை மொத்தமாக மாறி இருக்கிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யும் நிலையில் இந்த குளிர்ச்சியான வானிலையைப் பொதுமக்கள் என்ஜாய் செய்தே வருகிறார்கள்.

வானிலை எப்படி இருக்கும்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதில் இன்று (அக். 6) மற்றும் நாளை (அக். 7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

வரும் அக்.8 மற்றும் 9ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+