இடி மின்னலுடன் சம்பவம்! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் செம மழை! இரவு குளுகுளுனு ஆகிடும்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு மத்தியிலும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் குறைந்து, ஓரளவுக்குக் குளிர்ச்சியான கிளைமேட் நிலவுகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆபீசில் இருந்து வீடு திரும்புவோர் கவனமாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. பல்வேறு இடங்களிலும் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. நேற்றைய தினம் அதிகபட்சமாக வேலூரில் வெப்பம் 104.2°F செல்சியஸ் வரை வெப்பம் போனது. அதேபோல கரூரில் 103.1°F வரை வெப்பம் பதிவானது. இது மட்டுமின்றி திருச்சி, கரூர், தஞ்சை, சேலம், மதுரை, திருத்தணி, தர்மபுரி மாவட்டங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

மழை இருக்கு
ஏப்ரல் மாதமே வெப்பம் இந்தளவுக்குப் படுத்தும் நிலையில், அடுத்த மாதம் அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பம் இன்னுமே புதிய உச்சத்தைத் தொடும் என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். அதேநேரம் மாநிலத்தில் பரவலாக ஓரிரு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெப்பம் குளிர்ந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது.
9 மாவட்டங்களில்
இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியே மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் கூட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மாலை ஆபீசிஸ் இருந்து கிளம்புவோர் அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளதால் பரவலாக மழை இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த மழையால் வெப்பம் கொஞ்சம் குறைந்தால் நல்லதுதான் என்றே பொதுமக்கள் கருதுகிறார்கள்.
வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 26 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னையைப் பொறுத்தவரை இன்று (24-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications