சென்னை உட்பட மொத்தம் 9 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கொட்டும்! வந்தாச்சு ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 9 மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் உக்கிரமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் வெயில் உச்சத்தில் இருந்தது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே இருந்தது.

குறிப்பாகச் சென்னையில் எந்தளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது என்று நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இந்தாண்டு சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது.
அந்தளவுக்குச் சென்னை வெப்பம் மோசமாக இருந்தது. எப்போதும் தமிழ்நாட்டில் மே மாதம் தான் வெப்பம் மோசமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஜூலை மாதம் வெப்பம் அதிகமாக இருந்தது. முதல் இரண்டு வாரங்களில் மட்டும் பல நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. அதன் பிறகு வானிலை சட்டென மாறிய நிலையில், நல்ல மழை பெய்தது. முதலில் சில இடங்களில் மழை நீர் தேங்கிய போதிலும், அவை சீக்கிரம் வடிந்துவிட்டது.
அதன் பிறகு வெப்பம் கணிசமாகக் குறைந்த நிலையில், அப்போதும் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதன்படி இப்போது சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், சூளைமேடு, ஈக்காட்டுதாங்கல், வடபழனி எனப் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகரிலும் மழை பெய்யும் நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் பல இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications