குற்றாலத்தில் இருந்து வந்த குளு குளு செய்தி.. ஐந்தருவியில் மட்டும் இன்று முதல் குளிக்க அனுமதி
தென்காசி: குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் குறைந்து இருப்பதால் ஐந்தருவியில் மட்டும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதி கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிந்தது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அருவிகள், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றாலம் அருவிகளில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இரவு முதல் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது சபரிமலை சீசனாக உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் ஏராளமான மக்கள் தினமும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் குளித்து வந்தனர்.
இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரு மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்து வந்த மழையால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் குற்றாலம் வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தார்கள். இன்று காலை குற்றாலம் ஐந்தருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
நேற்று தென் மாவட்டங்களில் மழை குறைந்து இருக்கும் நிலையில், குற்றாலம் அருவிகளில் வழிந்தோடிய வெள்ள நீரும் குறைந்து உள்ளது. தாக்குப்பிடிக்கும் அளவுக்கே நீர் கொட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து இன்று குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தார்கள்.
மழை குறைந்து இருப்பதால் குற்றாலத்தின் மெயின் அருவி, பழைய குற்றாலம் போன்றவற்றிலும் ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் குறைந்து இருப்பதால் விரைவில் அந்த அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
குற்றாலத்தில் ஆசையாக குளிக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ஆர்ப்பரித்த தண்ணீரில் மூச்சுத்திணறல்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications