24 ரயில்கள் ரத்து.. நெல்லை, தூத்துக்குடியை சூழ்ந்த கனமழை வெள்ளத்தால் போக்குவரத்து முடக்கம்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கனமழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை வரலாறு காணாத அளவில் வெளுத்து வாங்கிய நிலையில், இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Trains cancelled due to flood in 4 districts including Nellai tuticorin

மிக கனமழை காரணமாக ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளதாலும் தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னைக்குச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளம் தொங்கிய நிலையில் உள்ளதால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இந்த ரயிலில் இருந்த பயணிகள் சுமார் 300 பேர் மீட்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயிலில் இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்ததால் 500 பயணிகளை மீட்க முடியவில்லை. ரயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு வழங்க முடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே வெள்ளத்திற்கு இடையே ரயிலில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. 500 பேருக்கு உணவு பொட்டலங்கள், நிவாரணப் பொருட்களை ராணுவ ஹெலிகாப்டர் எடுத்துச் சென்றது. அவர்களுக்கு உணவளித்து பின் அதே ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படவிருந்த 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லை - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை - நெல்லை இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நெல்லை - திருச்செந்தூருக்கு இடையேயான ரயில் சேவைகள் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trains cancelled due to flood in 4 districts including Nellai tuticorin

இதேபோன்று, நெல்லை - தூத்துக்குடி, நெல்லை - நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, இரு மார்க்கங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு - நெல்லை மற்றும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். இதேபோல் திருச்செந்தூர் - பாலக்காடு இடையேயான ரயில் சேவை, திருச்செந்தூருக்குப் பதிலாக திண்டுக்கலில் இருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - கோவை, திருச்செந்தூர் - பாலக்காடு உள்ளிட்ட பகுதிகள் இடையிலான 5 விரைவு ரயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+