முத்துநகர், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் போறீங்களா? இதுக்கு மேல போகமுடியாது! ரயில்வே அறிவிப்பு
சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, குமரி செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும்.

4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த 4 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், திருச்நெந்தூர் - பாலக்காடு, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லை, குமரி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது, சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வண்டி எண்: 12693 முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று மதுரை வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எழும்பூரிலிருந்து இன்று இரவு 8.10 மணிக்கு நெல்லை செல்லும் வ.எண்: 12631 நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரைவரை மட்டுமே செல்லும்.
எழும்பூரிலிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படும் சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மதுரை வரை மட்டும் செல்லும். மேலும் சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் புறப்படும் ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications