நாகர்கோவில் அருகே சுனாமி போல ஊருக்குள் வந்த ராட்சச அலைகள்.. பைக்கில் போனவரை இழுத்ததால் பரபரப்பு
சென்னை: நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திடீரென ஊருக்குள் சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வாகனங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்து உள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலிமை பெற்றது. இந்த மண்டலம், 14 கிமீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது.

இன்று அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடந்தது. கரையை கடந்த நிலையில் இதன் வலிமை குறைந்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் இதே திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திடீரென ஊருக்குள் சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். திடீரென கடல் நீர் உள்ளே வந்துள்ளது.
,கரை ஓரம் இருக்கும் வீடுகளுக்கு உள்ளே கடல் நீர் சென்றுள்ளது. வாகனங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆரம்ப கட்ட சுனாமி போல இது ஏற்பட்டுள்ளது. அருகே எங்கேயும் நிலநடுக்கம் பதிவாகவில்லை. அதேபோல் எங்கேயும்.. சுனாமி ஏற்படவில்லை. அப்படி இருக்க அலை ஆக்ரோஷமாக இருந்தது ஏன் என்று தெரியவில்லை.
வானிலை எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்:
17.10.2024 முதல் 18.10.2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடு ம்.
19.10.2024 மற்றும் 20.10.2024 : வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
17.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.10.2024: ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications