இரட்டை சுழற்சி.. நகரும் மேகக்கூட்டம்.. சென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. வானிலை ஆய்வாளர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா ராமசாமி வெளியிட்ட பதிவில் வங்காள விரிகுடாவில் இரட்டை சுழற்சி காணப்படுகிறது. அது விரைவில் இணைய போகிறது. இது தான் சென்னைக்கான அனைத்து மழையையும் இப்போது வரை தடுத்து நிறுத்தி வந்தது. இதனால் காற்றின் ஒருங்கிணைப்பு காரணமாக மழை நமக்கு சாதகமாக இல்லை என்று கூறியுள்ளார். அதேநேரம் வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறித்தும் கூறியுள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. அது தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

chennai rains rain

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் அரபிக் கடலில் இருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்றிரவு வலுப்பெற்று தொடர்ந்து அது ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்கிறது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக இன்று (அக்டோபர் 15) டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

chennai rains rain

இதேபோல் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழையும், அதனை ஒட்டியுள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் சார்பில் கூறப்பட்டிருந்தது.

அக்.17-ம் தேதியை பொறுத்தவரை வடமேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட கணிப்பின்படியே நேற்று இரவு முதலே சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் மழை தற்போது தொடரவில்லை. ஓரளவு மிதமான மழை, அதுவும் ஒரு சில இடங்களில் தான் பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா ராமசாமி வெளியிட்ட பதிவில் வங்காள விரிகுடாவில் இரட்டை சுழற்சி காணப்படுகிறது. அது விரைவில் இணைய போகிறது. இது தான் சென்னைக்கான அனைத்து மழையையும் இப்போது வரை தடுத்து நிறுத்தி வந்தது. இதனால் காற்றின் ஒருங்கிணைப்பு காரணமாக மழை நமக்கு சாதகமாக இல்லை. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றால் அல்லது குறைந்தால், அது தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி வடக்கே நகரும். அப்படி நகரும் போது, தெற்கு ஆந்திரப் பகுதிக்கு செல்லும் முன் எந்தஅளவிற்கு சென்னை கடற்கரைக்கு அருகில் வரப் போகிறது என்பதைப் பொறுத்து அக்டோபர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் மழையின் அளவு தீர்மானிக்கப்படும்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+