ரூ.6000 நிவாரணத்தை விடுங்க.. மத்திய அரசும் தனி நிவாரணம் தர முடிவு? நேரடியாக வங்கிக்கே வரும் பணம்!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் நிலையில், மத்திய அரசும் தனியாக சென்னை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நிவாரண தொகை அறிவிப்பு இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்: சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்:
கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசும் நிவாரணம்: தமிழ்நாடு அரசு சார்பாக சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் நிலையில், மத்திய அரசும் தனியாக சென்னை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சமீபத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துவிட்டு டெல்லி திரும்பிய மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர் மோடியை சந்தித்து விரிவான ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். இது குறித்து டெல்லியிலிருந்து சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது, ராஜ்நாத்சிங் கொடுத்த அறிக்கையில் பாதிப்புகளின் விபரங்கள் மட்டுமே இருக்கின்றன.
ஆனால், இதைத்தாண்டி, பிரதமரிடம் சில விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராஜ்நாத்சிங். அதாவது, ஜீரணிக்கமுடியாத பாதிப்புகளில் சென்னை இருக்கிறது. இப்போதைக்கு மத்திய அரசின் நிதி உதவி அவசியம். தமிழக அரசு அதிகாரிகளிடம் விவாதித்த வகையில், நிதி நெருக்கடி கடுமையாக இருக்கிறது. நிவாரண நிதி உதவி செய்வதுடன், தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து கொடுத்து உதவ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழக அரசு இருப்பதை என்னால் உணரமுடிந்தது.

அதனால், மத்திய அரசுதான் விரைந்து நிதி உதவியை செய்ய வேண்டும். வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட எவ்வளவு சீக்கிரம் மத்திய குழுவினரை சென்னைக்கு அனுப்ப முடியுமோ அதனை சீக்கிரம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் ராஜ்நாத் சிங்'' என்கிற தகவல்கள் டெல்லியிலிருந்து கிடைத்துள்ளன.
அதன்படி ஏற்கனவே மத்திய அரசு.. மாநில அரசுக்கு 500 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. இது இல்லாமல் மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் நிதி உதவியை கொடுக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக நேரடியாக வங்கி கணக்கிலேயே பணம் போட மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications