தென் மாவட்டங்களை உருக்குலைத்த பெரு மழை- 4 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வை தொடங்கியது!
மதுரை: தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது.
குமரிக் கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வழக்கமான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வடகிழக்கு பருவமழை, இலங்கைக்கு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு ஆகியவை இணைந்து தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழையைக் கொட்டித் தீர்த்தது.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் 30 மணிநேரத்துக்கும் மேலாக பெருமழை கொட்டியது. காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 95 செமீ அளவு கொட்டித் தீர்த்தது. இதேபோல பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல உள் கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு துண்டிக்கப்பட்டன. தாமிரபரணி நதியில் 1 லட்சம் கன அடி வெள்ளம் பாய்ந்தோடியது.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அமைச்சர்கள் குழு ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ராணுவத்தின் முப்படைகளும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் அடுத்தடுத்த வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக
ரூ.12,659 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின். மேலும் 4 தென் மாவட்டங்களின் சீரமைப்புக்காக ரூ.2,000 கோடியை உடனே ஒதுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய குழுவினர் மதுரை வந்தடைந்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கேபி சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நேற்று இரவு மதுரை வந்தடைந்தது. இந்தக் குழுவினர் இன்று வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறது.
மதுரையில் இருந்து கார் மூலமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஏற்கனவே மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை ஆய்வு செய்த மத்திய குழு, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது. மத்திய குழு ஆய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இந்த மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட உள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications